தமிழர் தேவைக்காக தளபதியை மாற்ற முடியாது

இலங்கை இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ள நிலையில், புலம்பெயர் அமைப்புக்களின் விருப்பத்திற்கு இணங்க இராணுவத் தளபதியொருவரை நியமிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,

எமது தாய்நாட்டில் சுதந்திரத்தை நிலைநாட்டிய இராணுவத்தினரை ஆட்டுவிக்க, புலம்பெயர் அமைப்புக்களுக்கு இடமளிக்க முடியாது. அமெரிக்காவும் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். தமது நாடு எது - இலங்கை என்றால் என்ன என்பதை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் இது தொடர்பாக அமெரிக்காவுக்கு விளக்கமளிக்கத் தயார். புலம்பெயர் அமைப்புக்களுக்கு சார்பான இராணுவத் தளபதி ஒருவரை நியமித்துக்கொள்ள நாம் ஒருபோதும் தயாரில்லை. - என்றார்.

No comments