சவேந்திர மீது நிரூபித்த குற்றமில்லை?

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை அமெரிக்கா மற்றும் இலங்கைக்கான உறவுக்கிடையில் தேவையற்ற முரண்பாட்டை ஏற்படுத்துகிறது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்க்கும் இடையில் குறித்த விடயம் தொடர்பாக நேற்று (16) விசேட கலந்துரையாடல் இடம்பெற்ற போது இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போதும் இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விடுக்கப்பட்ட தடை உத்தரவிற்கு கடுமையான ஆட்சேபனைகளையும் அமைச்சர் வெளியிட்டிருந்தார்.

மேலும், சவேந்திர சில்வாவின் சேவைக்கலாம் மற்றும் அனுபவத்தினை கருத்திற்கொண்டு இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார் என்றும் அவருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் பற்றிய நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

No comments