தலைமையிடம் காசு கேட்கும் மதினி?


2015ம் ஆண்டைய நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு சார்பில்
யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைய வைக்கப்பட்ட பெண் வேட்பாளரான மதினி தான் தற்கொலை செய்யப்போவதாக கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த தேர்தலில் சுமந்திரனை வெற்றிபெற வைப்பதற்கென, பலியாடாக போராட்ட பின்னணியுள்ள மதினி பெண்வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்தார்.அவர் தேர்தலில் சுமார் 16 ஆயிரம் வாக்குகளை பெற்றதுடன் அதனை சுமந்திரனிற்கும் விருப்பு வாக்காக பெற்றுக்கொடுத்திருந்தார்.

இதன் மூலமே எம்.ஏ.சுமந்திரன் வெற்றி பெறவும் முடிந்திருந்தது.

ஆயினும் தமது தேர்தல் வெற்றியின் பின்னர் தோல்வியடைந்த மதினியை எவரும் கண்டுகொள்ளவில்லை.அதிலும் குறிப்பாக சுமந்திரன் கூட கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் தேர்தல் செலவிற்கென சொந்த வீட்டை ஈடுவைத்து மதினி சுமார் 50 இலட்சத்திற்கு மேல் செலவு செய்திருந்தார்.தற்போது வரை கடனில் 30 இலட்சம் வரையில் அடை;ககப்படாதுள்ள நிலையில் கட்சி அவருக்கு எந்த உதவியையும் வழங்கியிருக்கவில்லை.சுமந்திரனும் வழங்கியிருக்கவில்லை.இந்நிலையில் அவரது வீடும் வங்கியால் சுவீகரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இம்முறை தேர்தலிற்கு வேறொரு பெண் வேட்பாளரை தமிழரசு தேடிவருகின்ற நிலையில் தனது கடனை அடைக்க உதவவேண்டுமெனவும் இல்லாவிடின் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.   

No comments