இலங்கை கடற்படை திருந்தியபாடாக இல்லை?


இலங்கை கடறபரப்பினுள் வரும் இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் வெறித்தனம் ஓய்ந்தபாடாக இல்லை.

இந்நிலையில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மாரியப்பன்(48 வயது) எனும் இந்திய மீனவரை கடற்படையினர் பலமாகத் தாக்கிய நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.பின்னர் அவர் மூன்று கடற்படையினரால் தூக்கிவரப்பட்டே கரை சேர்த்ததாக இந்திய மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று றோளர்களும் 11 இந்திய மீனவர்களும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்றைய தினம் மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தனர்.

ஏனக்கு 25 வருடமாக கடல் தொழில் புரியும் நிலையில் 5 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உண்டு. ஆட்கள் அற்ற நிலையில் எனது மகனையும. தொழிலிற்கு அழைத்துச் செல்வேன். இதனால் அந்த ஆண் மகனும் சேர்ந்தே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

படகின் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றவேளையிலேயே கைது செய்திருந்தனர்.இவ்வாறு எமது படகு பழுதடைந்தமையால் எம்மை கட்டி இழுத்துச் செல்ல வந்த படகும் பிடிக்கப்;பட்டது. கடற்படையினர் எம்மைக் கைது செய்தமைகூட பரவாயில்லை. ஆனால் இரக்கமற்ற தன்மையாக மூவர் இணைந்து மாறி மாறி கட்டை , பொல்லினால் பலமாக தாக்கினர். இவ்வாறு தாக்கியதில் ஒரு கட்டத்தில் எனக்கு எதுவுமே தெரியாது மயங்கிவிட்டேன்.பின்னர் அவர்கள் மூவர் இணைந்து தூக்கிவந்து வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பரிசோதனையின்போது எதுவுமே தெரிவிக்ககூடாது என கடற்படையினர் அச்சுறுத்தியதாகவும் தெரிவித்த அவர் .

இதன் காரணமாக மூச்சுவிடவோ அல்லது உணவு அருந்தவோ முடியவுல்லை என சுப்பிரமணியம் மாரியப்பன்(48 வயது) தெரிவித்தார்.

No comments