250 மில்லியன் நன்கொடை வழங்கிய சந்திரிகா
நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நன்கொடையை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதே இந்த நிதியின் முக்கிய நோக்கமாகும்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளையின் இயக்குநர்கள் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Post a Comment