எம் உறவுகளை புதைத்தது நீங்களா? விமலை நோக்கி சுகாஷ்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அண்மைக் காலமாக இலங்கை அரசாங்கத்தினாலும் அதனுடைய அமைச்சர்களினாலும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி போராடிவரும் உறவுகளுக்கு வேதனை மேல் வேதனை தருவதாக அமைந்திருக்கின்றது என்று சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருமான க.சுபாஷ் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று (04) சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கவனயீர்ப்பு போராட்டதில் கலந்து கொண்டு இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

நீண்ட காலமாக சிங்கள பௌத்த இனவாதத்தைக் கட்டிக் கொண்டிருக்கின்ற அனமச்சர் விமல் வீரவன்ச அண்மையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் தோண்டி எடுங்கள் என்று கூறினார். விமல் வீரவன்சவிடம் கேட்கின்றேன் விமல் வீரவன்ச அவர்களே நீங்களும் உங்கள் பங்காளிகளும் எங்கே எங்களுடைய உறவுகளை புதைத்துள்ளீர்கள்? என்று சொல்லுங்கள். புதைத்தவர்கள் நீங்களா? எவ்வாறு உங்களுக்கு தெரியும்? புதைக்கப்பட்டுள்ளார்கள் எங்கே என கூறுங்கள்? புதைத்தது நீங்களும் உங்கள் சகபாடிகளும் என்றால் எங்களுக்கு சொல்லுங்கள். அந்த இடத்தில் தோண்டி எடுக்கிறோம். - என்றார்.

No comments