பிரித்தானியாவில் மகிழுந்துகளுக்குத் தடை வருகிறது!!

பிரித்தானியாவில் புதிய பெட்ரோல், டீசல் அல்லது கைபிரிட் மகிழுந்துகளை விற்பனை செய்வதற்கான தடை 2035 முதல் 2040 வரை அரசாங்க
திட்டங்களின் கீழ் முன்வைக்கப்படவுள்ளது.

2050-க்குள் பூச்சிய நிலையில் காபன் வெளியேற்றும் இலக்கை இங்கிலாந்து அடைய விரும்பினால் 2040 மிகவும் தாமதமாகிவிடும் என்று நிபுணர்கள் கூறியதை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

போரிஸ் ஜான்சன் நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டிற்கான வெளியீட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தக் கொள்கையை வெளியிட்டார்.

No comments