அலுவலகத்தில் புகுந்து அராஜகம் புரிந்த நாகம்

திடீரென புகுந்த நாகபாம்பு ஒன்றினால் அலுவலக ஊழியர்கள் பதற்றமடைந்து ஓடிய சம்பவம் ஒன்று அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் நேற்று (03) பதிவாகியுள்ளது.

குறித்த அலுவலகத்தில் புகுந்த பாம்பு அங்க பதுங்கி இருந்துள்ளது. இதன்போது அங்கு வேலை செய்யும் பெண் உத்தியோகத்தர் பாம்பு ஊர்வதை கண்ணுற்று கத்தியுள்ளார். அவ்வேளை சக உத்தியோகத்தர்களும் அந்த பாம்பை நாகபாம்பு என இனங்கண்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரமாக குறித்த பாம்பு அவ்வலுவலகத்தில் பதுங்கி அராஜகம் செய்ததுடன் இறுதியாக அருகில் உள்ள வயல் வெளிக்கு நகர்ந்து சென்றதை காண முடிந்தது.

No comments