வடமாகாணசபையும் தமிழை கைவிட்டது?


இலங்கையில் சிங்கள தேசியக்கீதமே மட்டுமென வடமாகாணசபையும் தன்பங்கிற்கு தமிழை கைவிட்டு பொத்திக்கொண்டது.இன்றைய தினம் கைதடியிலுள்ள வடமாகாணசபை தலைமையகத்தில் இன்றைய இலங்கை சிங்கள சுதந்திர தினத்தில் வெறுமனே தேசிய கீதத்தை ஒலிக்கோர்வையாக ஒலிக்கவிட்டு அடங்கிக்கொண்டது.

கொழும்பில் சுதந்திர தினம் சிங்கள தேசிய கீதத்துடன் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.ஆனாலும் தேசிய மொழியான தமிழினை புறக்கணித்து சுதந்திரதினம் கொண்டாடுவது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் கொழும்பில் அதே நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

ஆனாலும் இவை பற்றி அலட்டிக்கொள்ளாது வெறும் ஒலிக்கோர்வையுடன் வடமாகாணசபை அடங்கிக்கொண்டது.

இதனிடையே இம்முறை வடகிழக்கு தமிழ் மக்கள் வாழ்விடங்களில் சுதந்திரதினம் சோபித்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.  

No comments