நீதித்துறையில் அரசியல் இல்லை! வாய்கூசாது உரையாற்றிய கோத்தா

இலங்கை இறையாண்மை உள்ள சுயாதிபத்யம் கொண்ட நாடு இலங்கை. இந்த சுதந்திரத்தை அடைய பாடுபட்ட அனைவரையும் நான் நினைவு கூறுகிறேன். கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம், மத உரிமைகளை வழங்க நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். யாரும் சவால் விட முடியாத ஜனநாயக உரிமைகள் இவை.

இவ்வாறு இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும்,

அதிகாரத்தை பகிரும்போது மத்திய அரசுடன் உள்ள பிணைப்பு தெளிவுபடுத்தப்பட வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் ஜனநாயகத் தேர்தலில் தலைவர்கள் தெரிவானது போல நான் தெரிவானேன். தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் அனைத்து இன மத மக்களுக்கும் சேவையாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்.

நீதியான நீதிச் சேவைகள், சுயாதீனமான அரச கட்டமைப்பு நாட்டுக்கு தேவை. இதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும். மக்களுக்கான எனது சேவையில் அரச அதிகார மட்டத்திலோ அல்லது நீதிமன்ற மட்டத்திலோ இடையூறுகள் வருமென்றோ நான் எதிர்பார்க்கவில்லை.

மக்களுக்கு தேவையற்ற அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். தேவையானோர் தமக்கு விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரத்தை எனது ஆட்சியில் நான் வழங்குவேன். சமூக பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். ஒற்றையாட்சியின் கீழ் மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

மக்களின் பொருளாதாரம், வறுமை பிரச்சினையை நாம் முதலில் தீர்க்க வேண்டும். இதனால் துரித அபிவிருத்தியை நாம் மேற்கொள்வோம். முழு அரச இயந்திரத்தையும் நாம் மறுசீரமைப்பு செய்வோம்.

தேசிய பாதுகாப்பை போல மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவோம். ஊழல், மோசடி, போதைப்பொருள் ஒழிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு சட்டத்தை கடுமையாக்குவோம். எழுத்து, பேச்சு சுதந்திரத்தை நாங்கள் மதிப்போம். விமர்சனங்களை ஏற்க எனது அரசு தயார். ஊடகங்கள் அவர்களது கருத்துக்களை தெரிவிக்க முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்லாமல் நாட்டின் முன்னேற்றம் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். நீதித்துறையில் உள்ள அரசியல் தலையீடுகளை இல்லாமலாக்க எனது அரசு உறுதி பூண்டுள்ளது. எனது நிர்வாகம் நீதித்துறை நடவடிக்கைகளில் காணப்பட்ட அரசியல் தலையீட்டு கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. வரலாறு எம் மீது சுமத்தியுள்ள இந்த சவாலை வெற்றி கொள்ள அனைவரும் ஒன்றுபடுவோம்.

பயங்கரவாதத்திற்கு வழி வகுக்கும் அடிப்படைவாத அமைப்புகள் இனி இலங்கைக்குள் செயல்பட  அனுமதிக்கப்படாது. - என்றார்.

No comments