சுதந்திர நாளில் வீதியில் தமிழ் மக்கள்


சுதந்திர தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (04) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரு பிரிவுகளாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் ஒரு தரப்பினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் சுதந்திர தினமான இன்று வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் நாட்டில் சுதந்திர தினம் எதற்கு என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி பதாகையை ஏற்தியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் உட்பட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

No comments