நெதர்லாந்தில் இரு தபால் குண்டுகள் வெடித்தன!

நெதர்லாந்தில் இரண்டு தபால் நிலையங்களில் கடித வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.


முதல் குண்டுவெடிப்பு நேற்றுப் புதன்கிழமை காலை 8 மணிக்குப் பின்னர் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள டச்சு வங்கி ஏபிஎன் அம்ரோவின் அஞ்சல் வரிசைப்படுத்தும் அலுவலகத்தில் நடந்துள்ளது.

இக்குண்டுவெடிப்பு நடைபெற்ற அரை மணி நேரம் கழித்து, தெற்கு நகரமான கெர்கிரேடில், ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ரிக்கோவின் தபால் அறையில் இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்தது.

எனினும் எவருக்கும் இக்குண்டு வெடிப்பில் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்துக் காவல்துறையினர் ஏற்கனவே கடித குண்டுகள் குறித்து விசாரித்து வந்தனர், இவை அனைத்தும் கடந்த சில வாரங்களாக ஒரே நபரால் அனுப்பப்பட்டவை எனத் தெரிவித்துள்ளனர்.

தங்குமிட விடுதி, எரிபொருள் நிரப்பு நிலையம், ஒரு கேரேஜ், ஒரு எஸ்டேட் முகவர் மற்றும் கட்டண வசூல் சேவை ஆகியவற்றை இலக்கு வைத்து தபால் குண்டுகள் கடந்த சனவரி மாதம் அனுப்பட்டன ஆனால் நல்லகாலம் அவை ஒன்றும் வெடிக்கவில்லை எனத் காவல்துறையினர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments