நீதிமன்றமாவது மயிராவது:வசந்த கரன்னகொட?


தமிழகத்தில் உயர் நீதிமன்றமாவது மயிராவது என சவால் விட்ட பாரதிய ஜனதாக்கட்சி பிரமுகருக்கு சவால் போன்று விடுத்தது வசந்த கரன்னகொட தமிழ் இளைஞர்களை காணாமல் ஆக்கிய விவகாரத்தில் நீதிமன்றமாவது மயிராவதென அவர் தொடர்ந்து கண்டுகொள்ளதேயிருந்து வருகின்றார்.

குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாமை தொடர்பில், அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு, இன்று (24) நான்காவது முறையாகவும் நோட்டீஸ் அனுப்புமாறு, மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.

2008 - 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், கொழும்பில் சன நெரிசல்மிக்க பகுதிகளிலிருந்து 11 இளைஞர்களைக் கடத்திக் காணாமலாக்கியமை தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் 14ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட, நேற்றைய தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை. இந்நிலையிலேயே, நீதிபதிகள் குழு, மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

No comments