லேசா..லேசா..மழுங்கடிக்கப்படும் ஆட்கொணர்வு மனுக்கள்!வழக்குகளை ஒத்தி வைத்து மழுங்கடிப்பதில் இலங்கை நீதித்துறை ஆசாகாய சாதனை புரிந்துவருகின்றது.அதன் ஒரு கட்டமாக இறுதிப்போரில்,
முல்லைத்தீவு - வட்டுவாகலில் இராணுவத்திடம்  சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்  தொடர்பான ஆட்க்கொணர்வு  மனு மீதான விசாரணையை, ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு  ஒத்திவைத்து, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், இன்று (24) உத்தரவிட்டது.

குறித்த  ஆட்கொணர்வு மனு மீதான இரண்டாம் கட்ட வழக்கு  விசாரணைகள், இன்று (24) முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில்  எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக 55வது படை பிரிவின் தளபதியான சவேந்திரசில்வாவை நீதிமன்றில் ஆஜராக காணாமல் ஆக்கப்பட்டோரது சட்டத்தரணிகள் கோரிய போதும் அதனை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

தற்போது சவேந்திரசில்வா இhணுவ தளபதியென்பது குறிப்பிடத்தக்கது. 

No comments