தஞ்சையில் ஈழக்குருக்களும்?


சர்ச்சைகள், நீதிமன்ற படியேற்றம் என்பவற்றின் மத்தியில் தஞ்சைப் பெருங்கோயில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது.

இராஜராஜ சோழனால் கட்டுவிக்கப்பட்ட தஞ்சைப் பெருங்கோயில் குடமுழுக்கு இன்று நடைபெற்றபோது தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பாடல்கள் சம் சந்தரப்பத்துடன் பாடப்பட்டிருந்தன.

இதனிடையே  குறித்த கிரியைகளில் ஈழத்தின் பிரபல நயினை நாகபூசணி அம்பாள் ஆலய பரம்பரை குரு ஆகமப் பிரவீணா சிவசிறீ கைலாசநாத வாமதேவக்குருக்கள் சர்வ சாதகாச்சாரியாராக பங்குபற்றியிருந்தார்.

தமிழக அரசின் அழைப்பில் அவர் அங்கு சென்றிருந்ததாக தெரியவருகின்றது.

No comments