இலங்கையினையும் துரத்தும் கொரோனோ?


கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக  சந்தேகிக்கப்படும் 17 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்டி போதனா வைத்தியசாலையில் அதிகளவான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக  விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன கூறியுள்ளார்.
கண்டி போதனா வைத்தியசாலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கராப்பிட்டிய வைத்தியசாலையில் 2 நோயாளர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இருவரும் சிகிச்சை பெறுகின்றனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டிக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் அங்கொட தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், எவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை இதுவரை உறுதி செய்யப்படவில்லை என விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments