இலங்கை வருவோருக்கு சிறப்பு சலுகை

ள48 நாடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச விசா வருகை திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவுஸ்ரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, மலேஷியா, நியூசிலாந்து, நோர்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, மற்றும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற 48 நாடுகளுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

No comments