சிறையில்லை இனி புனர்வாழ்வாம்?


னைவரையும் சிறைகளில் தடுத்து வைப்பதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை கருத்தில் கொண்டு  புதிய புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க கோத்தா அரசு திட்டமிட்டுள்ளது.
சந்தேக நபர்கள்,சிறு தண்டனை கைதிகளினை இவ்வாறு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வட்டரெக்க இளைஞர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் மத்திய நிலைய வளாகத்தில் புதிதாக மற்றுமொரு சிறைகூடத்தை அமைக்க சிறைச்சாலைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் ஈடுபட்டபோது சிறைக்கைதிகள் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துச்சொல்லப்பட்டதற்கு அமைய குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி 38 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட வட்டரெக்க புனர்வாழ்வு மையத்திற்கு அருகில் புதிய சிறைக்கூடத்தை அமைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பாக முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments