ஒரேநாளில் 200 பேரை பலியெடுத்த கொவிட்-19

சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் காெராேனா எனப்படும் கொவிட்-19 வைரஸ் பாதிப்பால் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1357 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி வைரஸ் பாதிப்பிற்கு ஹூபேய் மாகாணத்தில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

No comments