யானையிலா- இதயத்திலா போட்டி?


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யானையிலா அல்லது இதயத்திலா போட்டியிடுவதாவென்ற கேள்விக்கு மத்தியில்  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி நேற்று தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சிக்குள் இருக்கும் பிணக்குகளை தீர்த்து ‘இதயம்’ சின்னத்தின் கீழ் போட்டியிட ஒப்புக் கொண்டால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே நாளை இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது இந்த விடயம் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சின்னம் தொடர்பான முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளன. ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான உறுப்பினர்கள் யானை சின்னத்தின் கீழ் மட்டுமே போட்டியிடுவார்கள் என்றும் சஜித் தரப்பினர் ரணில் ஆதரவு உறுப்பினார்கள் இதய சின்னத்தின் கீழ் வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

No comments