சந்திரசிறியும் வந்து பார்வையிட்டார்?


யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாள் தோறும் தமிழகத்திற்கான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளநிலையில்; அடுத்தகட்ட மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை ஆராய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பில் ஆராயும் நோக்கில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவரும் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவ தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் அவரது குழுவினர் நேற்று (26) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தநது திரும்பியுள்ளனர்.

இதனிடையே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய நடவடிக்கைகளைத் மேலும் முன்னெடுப்பதன் மூலம், வட மாகாணத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கான விமான பயண சேவை மேம்படுமெனவும் சந்திரசிறீ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விமான நிலைய இரண்டாம் கட்ட விஸ்தரிப்பிற்கு இந்தியா நிதி ஒதுக்கியுள்ள போதும் இதுவரை விமான நிலையத்திற்கான பாதையை திறந்துவிட இலங்கை படைகள் மறுத்துவருகின்றன.

குறிப்பாக கொழும்பிற்கான ஒரு மணி நேர விமானப்பறப்பிற்காக சுமார் நான்கு மணி நேர அலைச்சல்கள் மற்றும் சோதனைகளை படையினரது கெடுபிடிகளால் எதிர்கொள்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments