கொரோனொ எதிரொலி; நாய், சீனாவில் பூனை உட்பட பல இறச்சிகளுக்கு தடை;

கொரோனா வைரஸ் உருவாக வழிவகுத்ததாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கும் வன விலங்குகள்,    நாய்கள் மற்றும் பூனைகள் இறச்சியை வாங்குவதும், விற்பதும் சட்டவிரோதமானது என சீனாவின் முக்கிய நகரமான ஷென்சென்னில் நகர அரசு சட்டமியற்றியுள்ளது.

 நகர அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட விதிமுறைகளின்படி  பன்றி இறைச்சி, கோழி, மாட்டிறைச்சி மற்றும் முயல், அத்துடன் மீன் மற்றும் கடல் உணவுகள் உட்பட ஒன்பது இறைச்சிகளுக்கு அனுமதியளித்துள்ளது.

 "காட்டு விலங்குகளின் இறைச்சிகளை தடைசெய்யப்படுவது வளர்ந்த நாடுகளில் ஒரு பொதுவான நடைமுறையாகும், இது நவீன நாகரிகத்தின் உலகளாவிய தேவையாகும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments