உலகின் மிகவும் குள்ளமான மனிதர் மரணம்!

உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதர் கஜேந்திரா தாபா மகர் தனது 27வது வயதில் உடல்நல குறைவால் காலமானார்.


நேபாளத்தின் பாக்லங் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த நபர் என்று பதிவு செய்யப்பட்டார்.  67 அங்குல உயரமும், 6 கிலோ உடல் எடையும் கொண்டவர். இதையடுத்து 54.6 செ.மீ அளவைக் கொண்ட  சந்திர பகதூர் டாங்கி உலகின் மிக குள்ள மனிதர் என்ற பட்டத்தை மாகரிடமிருந்து தட்டி பறித்தார்.

இருப்பினும் 2015 ஆம் ஆண்டு டாங்கி இறந்து விடவே கஜேந்திரா தாபா மகரே  மீண்டும் உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதரானார். இந்நிலையில் கடந்த சில  நாட்களாக உடல் நலக் குறைவால்  சிகிச்சை பெற்று வந்த தாபா மகர்  சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். 

No comments