ஈபிஆர்எல்எவ் புதிய பெயரில்:அதன் கீழேயே தேர்தல்!


கூட்டமைப்பினால் முழுமையான வெற்றியை அடுத்த தேர்தலில் பதிவு செய்ய முடியாது என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கான காரணம் எனத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டமைப்பால் முழுமையான வெற்றியை பெற்றுகொள்ள முடியாதெனவும் தெரிவித்தார். 

இதனிடையே   விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்பனே தற்போது புதிய கூட்டணி பற்றி பேசி வருகின்றன.

எவ்வாறாயினும், மேற்படி  கட்சிகளில் தற்போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு (ஈ.பி.ஆர்.எல்.எப்) மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்த்து உள்ளதாகவும், அந்த கட்சியின் பெயரை மாற்றுவது தொடர்பாக அதன் மத்திய குழுவில் ஆராய்ந்து அனுமதிகளை பெற்றுகொண்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு  அதற்கான அனுமதியை தரும் பட்சத்தில் அதன் கீpழேயே புதிய கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எனவும்,  அந்த கூட்டணிக்கான ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்பாகச் செய்யப்படலாம்  எனவும் தெரிவித்தார்.

No comments