திரையரங்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பிரான்ஸ் சனாதிபதி!

பிரான்ஸ் நாட்டு சனாதிபதி  மக்ரோன் பாரிஸ்ஸில் உள்ள  தியேட்டரிலிருந்து எதிர்ப்பாளர்களால் துரத்தப்பட்ட்டுள்ளது பாரிசில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஓய்வூதிய முறையை அரசாங்கம் திட்டமிட்டு மாற்றியமைப்பதை எதிர்த்து டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கிய நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை பிரான்ஸில்நடைபெற்றுவரும் தொடர்ச்சியில் இவ்வாறனதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திரையரங்கின் உள்ளே இருந்தபோது அரசாங்க விரோத எதிர்ப்பாளர்கள் குழு வடக்கு பாரிஸ் தியேட்டருக்குள் நுழைய முயன்றது என்றும்,மேக்ரோன் அந்த இடத்தில் இருப்பதாக சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கணக்கான  எதிர்ப்பாளர்கள் போஃப்ஸ் டு நோர்ட் தியேட்டருக்கு முன்னால் கூடியிருந்தனர். ஆச்சரியப்பட்ட பொலிசார் அவர்களைத் தடுக்க முயன்றபோது எதிர்ப்பாளர்கள் கோஷமிடுவதையும் சிலர் கதவுக்குள் நுழைந்தததினால் பாதுகாப்பு காரணங்களை காட்டி சனாதிபது வெளியேற்றப்பட்டார்.

No comments