கோத்தாவிற்கு தலையிடி இல்லை!


பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில், அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கான எந்தவித தேவையும் எதிர்க் கட்சிக்கு இல்லையென முன்னாள் சபைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருந்த போதிலும், சிலர் கூறுவது போன்று அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்க தரப்பின் நடவடிக்கைகளை முடக்குவதற்கு எதிர்க் கட்சிக்கு எந்தவித தேவையும் இல்லையெனவும்  அவர் இன்று (01) கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கும் எதிர்க் கட்சி தனது முழுமையாக ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் கிரியெல்ல எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கு சகல குழுக்களையும், கட்சிகளையும் ஒன்றிணைத்துக் கொள்வதற்கான விரிவான வேலைத்திட்டமொன்றை தயாரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

No comments