பின்னடித்த அமெரிக்கா; உக்ரேன் விமான கருப்புப்பெட்டி பிரான்சிடம் கொடுத்தது ஈரான்!

ஈரானின் தவறுதலான தாக்குதலில்  விழுந்த உக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டியை இறுதியாக பதிவு செய்யப்பட்ட தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்காக பிரான்சுக்கு அனுப்பப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது என்று ஈரானிய சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் விபத்து விசாரணை ஆணையத்தின் தலைவர்  ஹசன் ரெசாய்பர  தெரிவித்துள்ளார்.

 கருப்பு பெட்டியின் தகவல்களை பெறும் வழிமுறைகள்  உள்கட்டமைப்பு முறைகள் ஈரானிடம் இல்லாததால், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடாவிடம் தேவையான மென்பொருளைக் கேட்டது என்று  ஆனால் அவர்கள் யாரும் ஆரம்பத்தில் கோரிக்கையை ஏற்கவில்லை எனவும்
 பின்னர்  பிரான்ஸ் ஒப்புக்கொண்டதனால் கருப்பு பெட்டியை ஆய்வு செய்ய அனுப்ப முடிவு செய்துள்ளோம் என மேலும்  ஹசன் ரெசாய்பர குறிப்பிட்டார்.No comments