செயற்படத் தொடங்கியது உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி

பூமியைப் போன்று வேறு கோள்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதைக் கண்டறிய வகையில் உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியை சீனா அமைத்துள்ளது.

இத்தொலைநோக்கியை உத்தியோகபூர்வமாக செயற்படத் தொடங்கியுள்ளது என சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தொலைநோக்கி உதைபந்தாட்ட மைதானத்தைப் போல் 30 மடங்கு பரப்பளவைக் கொண்டது.

இதனை சீனர்கள் வான் கண் (Sky Eye) என அழைக்கிறார்கள். இதற்கு முன் இருந்த உலகின் பெரிய தொலைநோக்கியை விட 2.5 மடங்கு மேம்பட்ட ஆற்றலேக் கொண்டது.

இதன் மூலம் பல நம்பகரமான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.


No comments