எழுதுமட்டுவாழ் விபத்தில் சிறுமி படுகாயம்

தென்மராட்சி - எழுதுமட்டுவாழ் ஒட்டுவெளிச் சந்தியில் கார் மோதியதில் மூன்று வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (12) முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்றது.

சம்பவத்தில் எழுதுமட்டுவாழ் ஒட்டுவெளியை சேர்ந்த சி.யாசினி என்பவரே படுகாயமடைந்தவராவார்.

அம்மம்மாவுடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் திரும்பி ஒட்டுவெளிச் சந்தியில் இறங்கி புகையிரத தண்டவாளப் பகுதியில்  வீதிக் கரையுடன் இருக்கும் வீட்டிற்கு செல்வதற்காக அம்மம்மாவை விட்டு விட்டு குறுக்காக வீதியை கடந்த போது கிளிநொச்சியில் இருந்து வந்த கார் மோதியதிலேயே சிறுமி படுகாயமடைந்துள்ளார்.

No comments