கைகுலுக்கியவரின் மோதிரம் பறிபோனது

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கிய நபர் ஒருவர் கையில் இருந்த மோதிரத்தை அபகரித்துச் சென்ற சம்பவம் நேற்று (01) காலை சுண்டுக்குளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் வழமைபோல சுண்டுக்குளி பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அவர் அருகில் சென்ற மற்றுமொரு நபர் சகஜமாக பழகி அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கைகுலுக்கி உள்ளார். கைகுலுக்கி மாடு மேய்த்தவரின் கையில் இருந்த மோதிரத்தை அபகரித்து விட்டு அப்படியே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

No comments