டெல்லிக்கு அப்பம்:சீனாவிற்கு ஆப்பிள்!


ஒருவாறாக டெல்லிப்பயணத்தின் மூலம் மோடியை சமாளித்துக்கொண்ட கோத்தபாய அடுத்து தனது நேசத்திற்குரிய சீனாவிற்கு செல்லவுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பிலான சீன ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய இந்தியா வற்புறுத்தியிருந்த போதும் கோத்தபாய அதனை பொருட்படுத்தியிருக்கவில்லை.
இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சீனாவுக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கின் அழைப்பையேற்று, இம்மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி சீனாவுக்கு செல்லவுள்ளார்.

No comments