தமிழருக்கு துரோகம் செய்கிறார் சிறிசேன

19ஆவது திருத்தத்தை அழிக்க மைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் முடிவு தமிழர்களுக்கான துரோகமாகும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் மேலும்,

2015ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு தமிழர்கள் பெரும் பங்களிப்பை செய்திருந்தார்கள். அந்தவகையில் சுதந்திர ஆணைக்குழுக்களை நிறுவக்கூடிய 19ஆவது திருத்தச் சட்டத்தினை நாங்கள் கொண்டு வந்திருந்தோம்.

மக்களும் சுமூகமான வாழ்வை குறிப்பிட்ட காலம் வாழ்ந்திருந்தார்கள். தற்போது அரசாங்கத்தைப் பொறுப்பெடுத்துள்ள ராஜபக்ஷ குடும்பம் 19ஆவது திருத்தத்தினை இல்லாமல் செய்ய முற்படுகின்றது.
அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முண்டு கொடுப்பதாக இருந்தால் மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் வாக்குகளில் வந்து அனுபவித்த விடயங்கள் அனைத்தும் தவறான விடயமாக அமையும். இது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். - என்றார்.

No comments