கிளிநொச்சி வந்தார் இராஜாங்க அமைச்சர்

சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இன்று (18) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவரை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் வரவேற்றார்.

தொடர்ந்து மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சமுர்த்தி மற்றும் சமூக சேவைகள் முன்னேற்பாட்டு மீளாய்வு கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டு நிலைப்பாடுகளை கேட்டறிந்து கொண்டார்.

No comments