பொங்கலை புரிந்துகொள்ள சொன்ன கோத்தா?


நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த தேசிய பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்த உத்தரவிட்ட கோத்தபாய தமிழ் மக்களிற்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது ஒப்பமேதுமின்றி அது இன்று ஊடகங்களிற்கு அவரது ஊடகப்பிரிவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் ஒவ்வொருவரும் தம்முள் தாமே புரிந்து கொள்வதே பொங்கலின் நோக்கமாகுமெனவும் கோத்தபாயவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments