காலையில் நடந்த சராமரி சூடு! மகள் பலி

கேகாலை – வரக்காபொல, தொரவக்க பகுதியில் இனந்தெரியாத ஒருவரினால் இன்று (14) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் தாய் மற்றும் மகள் மீதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த தாய், வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments