சமரசமற்ற போராட்டம்!



எட்டாவது வாரமாக அரச படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி,வலி. வடக்கு பகுதி மக்கள் பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  தொடர்ச்சியாக  கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களாகத் தங்களது பூர்வீக நிலங்களை இழந்துள்ள மக்கள், இராணுவத்தினரின் வசம் உள்ள தங்களின் காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு வலியுறுத்தியே இப் போராட்டத்தைச் முன்னெடுத்து வருகின்றனர்.

ராணுவத்தினரின் பயன்பாடு: காணி உரிமையாளர்களின் பூர்வீக நிலங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், வர்த்தக நிலையங்களை அமைத்துத் தங்களின் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

தங்களின் சொந்த வீடுகளையும் விவசாய நிலங்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, வலி. வடக்கு மக்கள் பலாலி சந்தியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments