கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன்?தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கத்தயார் என அக்கட்சியின் தற்போதைய ஊடகப்பேச்சாளர்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கி செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கூட்டமைப்பின் தலைவராக உள்ள இரா.சம்பந்தன் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று தேசியப்பட்டியலில் உள்ளே செல்ல விருப்பம் கொண்டுள்ளார்.மறுபுறம் மாவையினை தேர்தல் போட்டியிலிருந்து விலக கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னை செயல் தலைவர் என சுமந்திரன் கூறிவருகின்ற நிலையில் அடுத்து கூட்டமைப்பின் தலைமையினை ஏற்கவும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

No comments