வெளியேறினார் ராஜித

18 நாட்கள் தாெடர் மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மருத்துவ மனையில் இருந்து வௌியேறியுள்ளார்.
இருதய நோய் காரணமாக கடந்த 26ஆம் திகதி நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜித சேனாரத்ன சிகிச்சைகளின் பின்னர் நேற்று (13) இரவு மருத்துவ மனையிலிருந்து வௌியேறியுள்ளதாக மருத்துவமனையின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments