இவர்களில் ஒருவரே பிரதமர் வேட்பாளர் - இறுதி முடிவு இதோ

ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (30) மாலை இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய தேசிய முன்னணயின் தலைவராகவும் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் தேர்தல் பிரச்சாரத் தலைவராகவும் அவரே செயற்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநாகர முதல்வர் ரோஷி சேனநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, அஜித் பெரேரா மற்றும் பக்கீர் மக்கார் ஆகியோர் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எஞ்சிய உறுப்பினர்களுடன் இடம்பெற்ற செயற்குழுவிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் சஜித் பிரேமதாச உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் 35 பேர் குறித்த கூட்டத்தை புறக்கணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments