கோத்தாவுக்கு எதிராக கிளர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள்

"காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை. அனைவரும் மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள்" என்று ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த பொறுப்பற்ற கருத்தை கண்டித்து இன்று (30) வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காலை 10 மணிக்கு இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் மரணச் சான்றிதழ்கள் எமக்கு வேண்டாம், சர்வதேச விசாரணை வேண்டும், கடத்தாதே கடத்தாதே எமது உறவுகளை இனியும் கடத்தாதே, கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே?, பத்துமாத வயிறு பற்றி எரிகிறது என் பிள்ளை எங்கே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற பதாகைகளை கையில் ஏந்தி தமது உறவுகளின் விடுதலைக்காக உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

No comments