சைவ-கத்தோலிக்க மோதலை தூண்டும் பௌத்தம்?


வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இந்துக்களிற்கும் கத்தோலிக்கர்களிற்குமிடையே முரண்பாடுகளை தூண்டிவிட புதிய அரசு மும்முரமாகியிருக்கின்றது.

இதன் தொடர்ச்சியாக திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்காக பௌத்த இந்து ஒற்றுமை சர்வதேச மாநாட்டில் இன்றையதினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பௌத்த இந்து ஒற்றுமை சர்வதேச மாநாடு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

அப்போதே மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கான வளைவு அமைப்பதுக்கு காணப்படும்  பிரச்சினை தொடர்பாக மகா சங்கத்தினர், புத்த சாசன அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடம் கதைத்து மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை  பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால என்பவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த இந்து ஒற்றுமை சர்வதேச மாநாட்டில் சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், மன்னார்  திருக்கேதீஸ்வர கோயிலுக்குரிய பகுதியிலே ஒரு வளைவை கட்ட முடியாமல் வருந்துகின்றோம் எனவும் பௌத்த பெரியோர்களே ஆதி சமயங்களாக இருக்கும்  சமயங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற கஸ்டங்களை நீங்கள் போக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுந்திருந்தார்.

No comments