டெங்கு உதவியாளர்கள் போராட்டம்

 டெங்கு தடுப்பு உதவியாளர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம் ஒன்றினை இன்று (30) முன்னெடுத்தனர்.

அம்பாறை - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்னால் ஒன்று கூடிய உதவியாளர்கள் தம்மை நிரந்தர சேவைக்குள் உள்ளீர்க்குமாறு பல்வேறு சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது "எமது நியாயமான கோரிக்கைகளை இரண்டரை வருடங்களாக எந்த தரப்பினரும் கருத்தில் எடுக்கவில்லை. தற்காலிகமாக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முயன்றால் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு திட்டங்கள் பாதிக்கப்படும்" என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
No comments