ரணில் முடிந்தது:கோத்தாவுடன் டீலுக்கு தயார்?


புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் தோல்வியடைவில்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏசுமந்திரன் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஐனாதிபதி கூறியிருக்கின்ற நிலையில் அதற்கு நாங்களும் இணங்கி செயற்பட தயாராக இருக்கிறோம் என்றார்.


புதிய அரசியமைப்பு முயற்சி இன்னமும் தோல்வியடைந்ததாக நாங்கள் கருதவில்லை.  ஐனவரி 3 ஆம் திகதி ஐனாதிபதி தன்னுடைய உரையில் இந்த நாட்டிற்கு ஒரு புதிய அரசமைப்பு தேவை என்று அவரே சொல்லியிருக்கிறார். அதில் புதிய அரசமைப்பிற்கு நான்கு விடயங்கள் தேவை என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.



அதில் ஒன்று நிறைவேற்றதிகார ஐனாதிபதி முறை, இரண்டாவது மாகாண சபைகள். மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல் முறை, நான்காவது நீதிமன்ற நீதித்துறைச் சுயாதீனம். ஆக நீதித்துறைச் சுயாதீனத்திற்காக புதிய அரசமைப்பு தேவையில்லை. ஆனால் மற்றைய மூன்று விடயங்களும் தான் நாங்கள் ஏற்கனவே கடந்த நான்கரை வருடங்களாகச் செயத அரசமைப்பு பேரவையிலே நாங்களும் அடையாளப்படுத்திய மூன்று விடயங்களாக இருக்கின்றன.



மேலும் ஐனாதிபதியுடன் நாங்கள் பேச வேண்டுமென்று சொன்ன போது அவரும் எங்களுடன் பேச வேண்டுமென்று சொல்லியிருந்தார். ஆனால் அதற்கான நடவடிக்கைகளை இன்னமும் அவர்கள் எடுக்கவில்லை. அதற்குப் பிறகு கூட்டமைப்போடு மட்டுமல்ல எல்லா தரப்போடும் பேச வேண்டுமென்றும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல சொல்லியிருந்தார். ஆக யாரோடும் பேசட்டும் ஆனால் கூட்டமைப்போடு பேசுவதற்கான திகதியையும் இடத்தையும் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளோம். 

No comments