நல்லுறவுக்கான தேசிய பொங்கல்

 மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்மடு கிராம மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன நல்லுறவுக்கான தேசிய பொங்கல் விழா வினாயகபுரம் கிராம அதிகாரி அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்றது.

கல்மடு கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர் ரி.தேவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்மடு கிராம அதிகாரி ஜே.கிருஸாந்த், சமுர்த்தி உத்தியோகத்தர் எஸ்.வவி, கல்மடு பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ.எஸ்.குகன், கல்மடு மெதடிஸ்த திருச்சபை போதகர் எஸ்.இளங்கோவன், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்மடு கிராம மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன நல்லுறவுக்கான ஐம்பது பொங்கல் பானைகள் வைக்கப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இன நல்லுறவுக்கான தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கோலம் போட்டவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பொங்கல் பூசையினை கல்மடு பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ.எஸ்.குகன் நடாத்தினார்.
No comments