ரணிலா? சஜித்தா? தீர்மானம் நிறைவேறியது

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் இருப்பார் என்று கட்சியின் செயற்குழு இன்று (30) தீர்மானித்துள்ளது.

கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (30) மாலை இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநாகர முதல்வர் ரோஷி சேனநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, அஜித் பெரேரா மற்றும் பக்கீர் மக்கார் ஆகியோர் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எஞ்சிய உறுப்பினர்களுடன் இடம்பெற்ற செயற்குழுவிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் சஜித் பிரேமதாச உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் 35 பேர் குறித்த கூட்டத்தை புறக்கணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments