1000 ரூபாய் கொடுக்கா விட்டால் தோட்டங்களை கைப்பற்றுவோம்

தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிறுவனங்கள் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (30) காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும்,

தோட்டங்கள் அரசாங்கத்துக்கே சொந்தமானவை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதனை தோட்ட நிறுவனங்கள் நிறைவேற்ற தவறினால் தோட்டங்களை பொறுப்பேற்று அவை இளைஞர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும். தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதன அதிகரிப்பில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது – என்றார்.

No comments