ஏமாற்றிவிட்டது அமெரிக்கா; இந்த உலகம் புது அணுவாயுதத்தை பார்க்கப்போகிறது!

வட கொரிய அணுவாயுத சோதனைகளையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளையும் நடத்துவதில் கடைப்பிடித்துவரும் தற்காலிகத் தடையை நீக்கவுள்ளதாகவும் , எனவே உலகம் விரைவில் புதிய ஆயுதத்தைக் காணுமென அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன், தெரிவித்துள்ளார். 

அணுவாயுதக் களைவு குறித்து தடைப்பட்டுள்ள  பேச்சுவார்த்தையை , அரசியல் நலன்களுக்காக அமெரிக்கா இழுத்தடிப்பதாக  கூறிய அவர் .வட கொரியாவின் அணுவாயு ஆற்றலை, அமெரிக்காவின் செயல்பாடுகளே  தீர்மானிக்கிறது என மேலும் கூறியுள்ளார். 

சென்ற ஆண்டு இறுதிக்குள், அமெரிக்க சில சலுகைகளைத் தனக்கு வழங்கத் தவறினால் புதிய பாதையில் செல்லப் போவதாக, வட கொரியா ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில், இந்தச் செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments