முறைகேடான தகவல் பகிர்வு ; முகநூலுக்கு 1.6 மில்லியன் டாலர்கள் அபராதம்!

பிரேசிலின் நீதியமைச்சகம் இந்த அபராதத்தை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திஸ் இஸ் யுவர் டிஜிட்டல் லைஃப் என்ற ஆப் தயாரிப்புக்காக 4,43,000 பேஸ்புக் பயனாளர்களின் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை கண்டுபிடித்ததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிரேசில் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது இந்தத் தரவுகள் ‘சந்தேகத்திற்குரிய பயன்களுக்காக’ பகிரப்பட்டுளது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயனாளர்களின் அந்தரந்தத் தகவல்கள், சுயவிவரங்களை தாமாகவே பாதுகாப்பும் தெரிவுகள் குறித்து உலகின் மிகப்பெரிய சமூகவலைத்தள நிறுவனம் பயனாளர்களுக்கு போதிய தகவல்கள் அளிக்கவில்லை என்று பிரேசில் சாடியுள்ளது. குறிப்பாக நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் ஆகியோர் தரவுகளைக் காப்பது குறித்த டீஃபால்ட் முறைகளை பயனாளர்களுக்கு போதிய அளவு தெரிவிக்கவில்லை என்கிறது பிரேசில் நீதி அமைச்சகம்.
2018-ல் முகநூல் பயனர்களின் தரவுகளை கேம்பிரிட்ஜ் அனலிடிக்காவுக்கு பகிர்ந்ததாக மீடியா தரப்பில் எழுந்த செய்திகளை அடுத்து அதையும் விசாரிக்கவுள்ளதாக பிரேசில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அபராதத்தை எதிர்த்து ஃபேஸ்புக் 10 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம், அபராதத் தொகையான 1.6 மில்லியன் டாலர்களை ஃபேஸ்புக் 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
Post a Comment