காணாமல் ஆக்கப்பட்ட மகனை காணாது தாய் மரணம்

கொட்டகை வாழ்க்கையுடன் எவ்வித உதவிகளும் அற்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்கு நடந்ததை அறியாமல் மற்றுமொரு தாயின் உயிரும் பிரிந்துள்ளது.
கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வந்த, இறுதி யுத்தத்தில் பிள்ளையைத் தொலைத்த தாயான சின்னையா கண்ணம்மா (77-வயது) கடந்த 19ம் திகதி காலமாகியுள்ளார்.
தனது கடைசி மகன் சின்னையா பிரசாந் என்பவர் காணாமலாக்கப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளாக அவரை, குறித்த தாய் தேடிவந்துள்ளார்.
இவ்வாறு பல தாய், தந்தையர்கள் யுத்தத்தினால் தமது பிள்ளைகளைத் தொலைத்தவர்களாகவும், பிள்ளை உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என அறியாதவர்களாகவும் எங்கியே காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியாதவர்களாக அன்றாடம் போராடுகின்றனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடிப்படை வசதிகளற்றும், அபிவிருத்தியின்றியும் காணப்படுகின்றமை தொடர்பாக கவனஞ்செலுத்தப்படவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

No comments