மகளின் தற்கொலை தாங்காது தீ மூட்டிய தாயும் பலி!

யாழ்ப்பாணம் - கொக்குவில், அரசடி பகுதியில் தீக்காயத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று (11) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த குறித்த பெண்ணின் மகளான கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் பயின்ற மகேஸ்வரன் கஜானி (17-வயது) என்ற மாணவி கடந்த 8ம் திகதி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருந்தார்.

இந்நிலையில் பிறிதொரு இடத்துக்கு சென்று திரும்பிய குறித்த மாணவியின் தாய் அன்றைய தினம் (08) மாலை சடலத்தை அகற்றுவதற்கு முன்னதாக பொலிஸாரின் மரண விசாரணை இடம்பெற்ற போதே தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து விசாரணையில் இருந்த பொலிஸார் தீக்கயாங்களுடன் தாயாரையும் தற்கொலை செய்த மகளின் சடலத்தையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தாயார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments